இனிப்பான தின்பண்டங்களுக்கான மூன்று சர்வதேச விருதுகளைத் தனதாக்கியது Sunrich Biscuits

Business & Finance Events

இனிப்பான தின்பண்டங்களுக்கான மூன்று சர்வதேச விருதுகளைத் தனதாக்கியது Sunrich Biscuits

 

(டிசம்பர் 20, கொழும்பு) இலங்கையின் முதன்மையான பிஸ்கட் உற்பத்தி நிறுவனமான   Sunrich Confectionery (Private) Limitedஅண்மையில் மூன்று சர்வதேச விருதுகளை வென்றதன் மூலம், சர்வதேச உணவு  மற்றும் பானததுறைகளில் மற்றொரு  மைல்கல் சாதனையை நிலைநிறுத்தியுள்ளது.

அதன் முக்கியமான உற்பத்திகளான Chocolate Cream, Lemon Puff  மற்றும் Power Crunch Biscuits  எனும் மூன்று உற்பத்திகளுக்கே, சர்வதேச அளவில் அதிகளவு  பிரபலம் பெற்ற, International Taste and Quality Institute (ITQI) வழங்கும் இரண்டு நட்சத்திர தர விருது வழங்கப்பட்டுள்ளது. பெல்ஜியத்தில் நடைபெற்ற இந்த விருது வழங்கல் விழாவில் திரு ஸ்ரீதரன் இந்த விருதினை பெற்றுக்கொண்டார்.

குறிப்பிடத்தக்க இந்த வெற்றி பற்றி கருத்துக் கூறிய Sunrich Biscuits இன் பிரதம நிறைவேற்றதிகாரியும் முகாமைத்துவப் பணிப்பாளருமான, திரு. எம்.ஸ்ரீதரன்:-

‘சுவை மற்றும்; தரத்துக்கான IQTI சர்வதேச விருதுகளைப் பெற்றுக்கொண்டமை எமக்கு மேலும் கௌரவத்தையும் மதிப்பினையும் தந்துள்ளது. நாங்கள் இரண்டாவது தடவையாக இந்த விருதினை வென்றிருக்கின்றோம்;. 2015 ஆம் ஆண்டில் நாங்கள் இரண்டு விருதுகளை வென்றிருந்தோம். இவ்வருடம் மூன்று விருதுகளை வென்றிருக்கின்றோம். எங்களுடைய வாடிக்கையாளர்களை வெல்வதே Sunrich Biscuits இன் இலக்காகும். நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய நன்றியை இந்த தருணத்தில் தெரிவித்துக்கொள்ளவிரும்புகின்றோம். ஏனெனில் அவர்கள் இல்லாமல் மூன்று விருதுகளைப் பெறுவது என்பது  சாத்தியமாகியிருக்காது. தின்பண்டத்துறையானது புத்தாக்கங்களால் நிரம்பியுள்ளது. அதன் மூலம் விவேகமான வாடிக்கையாளர்களுக்;கு  தேர்வுகளும் ஆச்சரியங்களும் வந்து சேர்கின்றன. இத்துறை முழுவதும் புத்தாக்கங்களால் நிரம்பியிருக்க, அதிகளவிலான புதிய உற்பத்திகளும் நாளுக்கு நாள் வெளிவருகின்றன. இந்நிலையில் ITQI   அங்கீகாரம்  கிடைத்தமை       எமக்குப்  பேரானந்தம் தருகின்றது. அத்துடன் எமது வாடிக்கையாளர்களின் சாதகமான விமர்சனங்கள் எமக்கு மேலும் பலம் சேர்ப்பதாய் உள்ளது’ என்று பெருமையுடன் கூறினார் ஸ்ரீதரன்.

Sunrich Confectionery ஐச் சேர்ந்த திரு எம்.ஸ்ரீதரன் பெருமைமிகு ITQI விருதினைப் பெறுகின்றார்

 

மாறிவரும் வாடிக்கையாளர்களின் முன்னுரிமைத் தேர்வுகளுக்கமைய, நுகர்வோரின்  விருப்புக்கேற்ற தரம் மற்றும் புத்தாக்கங்களை வழங்கும் வகையிலான        ஒருங்கிணைந்த விநியோகச் சங்கிலியை   உறுதி செய்வதே  Sunrich Biscuit இன் வளர்ச்சி மூலோபாயமாகும்.

‘ITQI விருதுகளானவை, சன்ரிச் பிஸ்கட் வகைகளின் ஒப்பற்ற தரம் மற்றும்  தனித்துவமான சுவை என்பனவற்றுக்குக் கிடைத்த அங்கீகாரமாகும். உணவுப்   பாதுகாப்பில் சிறந்த நடைமுறைகளை  உறுதிசெய்து, தொடர்ச்சியான முன்னேற்றங்களுக்கு வழிவகுப்பது, ஆரம்பம் முதல் சன்ரிச் கொன்;பெக்ஷனறியின் பிரதான கொள்கையாகவுள்ளது. இலங்கைக்;கான பாரிய வெற்றியாகக் கருதப்படும் இந்த அங்கீகாரத்தைப் பெற்றமை மகிழ்ச்சி தருகின்றது.’ என்றார்.

இலங்கைப் பொருளாதாரத்துக்கு உணவும் பானமும் துறை முக்கியமானதென்பதைக் கருத்திற்கொண்டு, உலகளாவிய ரீதியில் தோற்றம் மற்றும் சுவை என்பனவற்றில், சிறந்த தரங்களைப் பேணுவதில் இலங்கை தின்பண்டத்துறை தன்னை அர்ப்பணித்துள்ளது.

பிஸ்;கட் உற்பத்தி நிறுவனம் ஒன்றை நிறுவுவது எனது சிறுபராய முதற்கொண்ட கனவு என்கின்றார் ஸ்ரீதரன்.

‘இக்கனவை நனவாக்கவும், ஒரு அடிப்படையான அடித்தளத்தினை இடவும், லண்டனில் பிரசித்தி பெற்ற சவுத் பேங் பல்கலைக்கழகத்தில் நான்  பிஸ்கட் உற்பத்தியை விசேட கற்கைநெறியாகக்கொண்டு உற்பத்தி முகாமைத்துவத்தில், விஞ்ஞானமானியைப் பூர்த்தி செய்தேன். எனது தந்தைக்குச் சொந்தமான லக்கிலாண்ட்ஸ் பிஸ்கட்சில் பணிபுரிந்து கைத்தொழிற்றுறைசார் சிறந்த நடைமுறைகள் மற்றும் தொழில்சார் அனுபவம் என்பனவற்றைப் பெற்று நான் எனது சொந்த நிறுவனமான Sunrich Biscuits இனை 2006 இல் ஆரம்பித்தேன்’ என்கிறார் ஸ்ரீதரன்.

ITQI ஆனது இரண்டு பிரதான காரணிகளைக் கருத்தில் கொண்டு விருதுகளை வழங்குகின்றது. சர்வதேச சுவை மற்றும் தர நிறுவகத்தின் (ITQI) ஜுரிகள் சபையில் சமையல்காரர்கள், ஹோட்டல் பணியாளர்கள், சுவை தொடர்பான ஆலோசகர்கள் என 120 தொழில்சார் நிபுணர்கள் பங்கேற்றனர்.

Sunrich Biscuits ஆனது நூறு சதவீதம் இலங்கைக்குச் சொந்தமானதொரு உற்பத்திக் கம்பனியாகும்;. அது இலங்கையை நம்புவதன் மூலம், இலங்கைக்கு பெருமை சேர்க்கின்றது. Sunrich Confectionery (Private) Limited  ஆனது, 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இந்நிறுவனமானது உண்மையில் ஒரு சர்வதேச நிறுவனமாக மாறிவருகின்றது. அதன் 25 க்கும் மேற்பட்ட உற்பத்திப் பொருட்கள், உற்பத்தி செய்யப்பட்டு நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படுகின்றன. இந்த உற்பத்திகள் சீசெல்ஸ், மாலைதீவு, சுவிட்சர்லாந்து, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது, சன்ரிச்சானது சர்வதேச அங்கீகாரத்தினையும் வென்றுள்ளதென்பதைக் காட்டுகின்றது.

Lemon Puff, Chocolate Cream மற்றும் Power Crunch என்பனவற்றுடன் Sunrich ஆனது,  வழங்கும்  Lacto Marie, Crispy Cream Cracker, Milk Crunch, Strawberry Puff மற்றும்  Milkies போன்ற பாரிய வீச்சுக் கொண்ட உற்பத்திகள் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பிரபலமானவையாக உள்ளன.

 

தனது பிஸ்கட் உற்பத்திகளுக்காக Sunrich இனால் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள், சிறந்த தரம் கொண்டவையாக இருப்பதோடு, நம்பிக்கையான  வாடிக்கையாளர்களிடமிருந்தும் பெறப்படுகின்றது. சிறந்த தரத்திலான மேற்பார்வையின் பின்னரே உற்பத்திப் பொருட்கள் சந்தைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. தரக்கட்டுப்பாட்டாளர்கள், உணவுப் பாதுகாப்பு நிபுணர்கள் ஆகியோரின் கவனமான மேற்பார்வையின் பின்னரே பொருட்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. Sunrich உற்பத்திகளானவை, அதிக பிரபலம் பெற்ற ISO 22000, HACCP தர சான்றிதழ்களை 2015 ஆம் ஆண்டில் இலங்கை கட்டளைகள் நிறுவகத்திலிருந்து  (SLSI ) பெற்றுக் கொண்டது.

‘சர்வதேச ரீதியாக இந்த வர்த்தக நாமம் மேலும் பிரசித்திபெறும் என்று நான் நம்புகின்றேன். சன்ரிச்சில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை நான் பெரிதும் விரும்புகின்றேன்.  எங்களது நூறு சதவீதமான இலங்கை உற்பத்திகளை உலகின் மேலும் பல நாடுகளுக்கு விஸ்தரிக்க நான் விரும்புகின்றேன்’ என்றும் அவர் கூறினார்.

முதலீட்டு சபையின் வர்த்தகமாக உருவாக்கப்பட்ட சன்ரிச் பிஸ்கட்ஸ் கம்பனியானது ஹொரணையில் நிறுவப்பட்டுள்ளது. இந்நிறுவனம் அப்பகுதி மக்களுக்கு சுமார் 200 நேரடியான மற்றும் மறைமுகமாக வேலைவாய்ப்புகளை வழங்குகின்றது. தனது நிறுவனத்தில் கடுமையான உழைத்து அதனை மேன்நிலைக்கு கொண்டுவந்த ஊழியர்களுக்கு தனது மனமார்ந்த நன்றிகளையும் இத் தருணத்தில் அவர் தெரிவித்தார். மேலதிக தகவல்களுக்கு  றறற.ளரசெiஉhடிளைஉரவைள.உழஅ.

இலங்கையின் பிரபல சுழல்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் ளுரசெiஉ ஊழகெநஉவழையெசல இன் வர்த்தகத் தூதுவராக உள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *